Sneha Reddy Net Worth
Sneha Reddy Net Worth Details : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவரது மனைவி தான் சினேகா ரெட்டி. அதோடு, சினேகா ரெட்டி பிரபல தொழிலதிபராகவும் அறியப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு எத்தனை கோடி என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…
Sneha Reddy Net Worth
தெலுங்கு சினிமாவில் அதிகளவில் விரும்பப்படும் ஜோடி என்றால் அது அல்லு அர்ஜூன் மற்றும் சினேகா ரெட்டி. ஹைதராபாத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கஞ்சர்சலா சந்திரசேகர் ரெட்டி. இவர் தொழில் முனைவோர் மற்றும் சைண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தலைவர். கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு அல்லு அயன் என்ற மகன் பிறந்தான். இதைத் தொடர்ந்து 2016ல் அல்லு அர்ஹா என்ற மகள் பிறந்தாள்.
Sneha Reddy Net Worth
சினேகா ரெட்டி மசாசூசெட்ஸ் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். அதோடு அமெரிக்காவில் கம்யூட்டர் சைன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். படித்து முடித்த சினேகா ரெட்டி, சைண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் இயக்குநராக பொறுப்பு வகித்தார்.
Sneha Reddy Net Worth
இதன் மூலமாக சிறந்த அனுபவத்தை பெற்ற சினேகா ரெட்டி 2016 ஆம் ஆண்டு ஜூப்ளி ஹில்ஸில் ஸ்டூடியோ பிகாபூ என்ற ஆன்லைன் போட்டோ ஸ்டூடியோவை தொடங்கினார். இப்படி பல நிறுவனங்களை மேற்கொண்டு வரும் சினேகா ரெட்டியின் நிகர சொத்து மதிப்பு ரூ.42 கோடி என்று தகவல் தெரிவிக்கின்றது.