டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
28
beast
ஏப்ரலில் வெளியாகும் விஜய் மூவி:
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதிக்கு முன்பு படத்தினை பற்றிய புதிய புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
38
beast single
முதல் சிங்குளாக அரபிக் குத்து :
இந்த படத்திலிருந்து முதல் சிங்குளாக அரபிக் குத்து வெளியாகி மாஸ் காட்டியது. இதற்கான ப்ரோமோவும் நல்ல வரவேற்பை பெற்றது. அரபிக் குத்து பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.
இரண்டாம் சிங்குளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது. இந்த பாடல் கார்த்திக் வரிகளில் அனிரூத் இசையமைப்பில் உருவாகியுள்ளது. அதோடு விஜய் தனது சொந்த குரலில் இந்த பாடலை பாடியிருந்தார்.
58
beast poster
அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்:
ஏற்கனவே பீஸ்டில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து ரிலீஸ் தேதியும் வெளியானது. படம் திரைக்கு வர இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருப்பதால் விரைவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அல்லது டீசரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
68
beast poster
வெளியான கூல் லுக் போட்டோ :
இதற்கிடையே பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திலிருந்து கலர்புல் போட்டோ வெளியானது. அதில் நாயகன் விஜய், நாயகி பூஜா, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் இடம்பெற்றிருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
78
beast poster
பேன் இந்திய படமான பீஸ்ட் :
பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான சென்சார் வேலைகள் முடிவடைந்து யூ / ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பேன் இந்திய படமாக பீஸ்ட் வெளியாவது உறுதியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பீஸ்ட் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் விஜயின் மாஸ் லுக் இடம்பெற்றுள்ளது.