Beast : சென்சார் முடித்த பீஸ்ட்..கன்பார்ம் ஆனா ரன்னிங் டைம்..

Kanmani P   | Asianet News
Published : Mar 21, 2022, 07:03 PM IST

விஜயின் பீஸ்ட் படத்திற்கான சென்சார் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த சான்றிதழ் படி ரன்னிங் டைமும் கன்பார்ம்  ஆகியுள்ளது.

PREV
18
Beast : சென்சார் முடித்த பீஸ்ட்..கன்பார்ம் ஆனா ரன்னிங் டைம்..
BEAST

டாக்டரை அடுத்து பீஸ்ட் :

டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதோடு இந்த படம் மூலம் பிரபல இயக்குனர் சில்வராகவன் வில்லன் அவதாரம் எடுக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷான் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  
 

28
BEAST

முதல் சிங்கிள் ப்ரோமோ :

இந்த படத்திலிருந்து முதல் சிங்குளுக்கான ப்ரோமோ முன்பு வெளியாகியது. டாக்டர் ஸ்டைலில் வெளியான இத பாடல் ப்ரோமோவில் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் இந்த பாடலின் ஆசிரியர் சிவகார்த்திகேயனை உள்ளிட்ட மூவர் இடம்பெற்றுள்ளனர். இந்த ப்ரோமோ ஏகபோக வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு... Jolly O Gymkhana song : விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’வுக்கு அர்த்தம் என்ன? - பீஸ்ட் பாடலாசிரியர் விளக்கம்

38
BEAST

வெற்றி பெற்ற அரபிக் குத்து :

ப்ரோமோவை அடுத்து அரபிக் குத்து பாடலும் வெளியானது. காதலர் தினத்தன்று வெளியான இந்த பாடலை ரசிகர்கள் ஆசை தீர கொண்டாடி முடித்தனர். எக்கசக்க ரீல்ஸுகளும் செய்தாகி விட்டது.   பட்டி தொட்டியெல்லாம் கலக்கியது இந்த பாடல்.

48
BEAST

ஸ்டெப்புகளால் கவர்ந்த விஜய் :

அரபிக் குத்து பாடலில் விஜயின் நடனம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இவரது நடன அசைவுகளுக்கு ஏற்கனவே ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த ஸ்டெப்புகளை பிரபலங்கள் பலரும் நடனமாடிவிட்டனர். அதோடு கிரிக்கெட் வீரர்களும் டேன்ஸ் செய்து விட்டனர்.

58
BEAST

2 வது பாடல் ப்ரோமோ :

அரபிக் குத்து வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் வெளியானது. இந்த பாடலுக்காக விஜய், நெல்சன், அனிரூத் மூவரும் தோன்றி இருந்த ப்ரோமோ வெளியானது. முந்தைய ப்ரோமோ போலவே ஜாலியோ ஜிம்கானா ப்ரோமோவும் தெறி வெற்றி பெற்றது. 

மேலும் செய்திகளுக்கு...Jolly O Gymkhana song : விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலும் காப்பியா?- அனிருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
 

68
beast second single

அடுத்த ப்ரோமோ :

இதையடுத்து நெல்சன் நடன இயக்குனருடன் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்ட வெளியே கிளிப்ஸ் வெளியாகி பெரிதும் கவர்ந்தது. நடன அசைவுகள் செய்யத் தெரியாமல் துணை நடிகர்கள் விழிக்கும் காட்சிகள் நகைச்சுவையை ஏற்படுத்தியிருந்தது.

78
beast

ஜாலியோ ஜிம்கானா :

இதையடுத்து கடந்த 19-ம் தேதி ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகியது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார்.   கு.கார்த்தி எழுதியுள்ள இந்த பாடலுக்கான அர்த்தமாக  “எந்த மாதிரி பிரச்சனை நடந்தாலும், அது நடந்தது தான். அதை நம்மால் மாற்ற முடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும், அதுக்கு தான் இந்த பாட்டோட அர்த்தம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

88
beast

சென்சார் சான்றிதழ் :

ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்திற்கான நீளமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி2 மணி நேரம் 35 நிமிடங்கள் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories