வில்லன் என்றாலே அது ரகுவரன் தான் என்னும் அளவிற்கு தனது மாறுபட்ட நடிப்பால் ரசிர்களை மிரள வைத்தவர் ரகுவரன். பிரபலங்களுக்கு வில்லனாக இவர் வந்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தன.
28
raghuvaran
பாட்ஷா, அண்ணாமலை என பெரும்பாலான ரஜினி படங்களில் இவர் இருப்பர். பாட்ஷாவில் தனக்கென தனி ஸ்லாங் கொண்டு ரகுவரன் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
38
raghuvaran
மலையாளப்படம் காக்கா படத்திலேயே வில்லனாக அறிமுகமாகி இருந்தார். பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்து தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் நிரூபித்தார் ரகுவரன்.
48
raghuvaran
இதை தொடர்ந்து அதே வருடம் 1982 -ம் ஆண்டு தமிழில் ஏழாம் மனிதன், ஒரு ஓடை நதியாகிறது, நீ தொடும் போது, முடிவல்ல ஆரம்பம், எங்கிருந்தாலும் வாழ்க, மீண்டும் பல்லவி, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள், கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
58
raghuvara rohini
நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 8 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
68
Raghuvaran
இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து ரோஹிணி சமீபத்தில் மனம் திறந்துள்ளார் அதில்..அனைவரையும் போல தங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களுக்குள் எழுந்த பிரச்சனை மகனை பதித்த காரணத்தால் தான் இருவரும் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகி விட்டது என கூறியுள்ளார்.
78
Raghuvaran
எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த ரகுவரன் கடந்த கடந்த 2008-ம் ஆண்டு தனது 49 வது வயதில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் எக்கசக்க ரசிகர்களை கொண்டவர் ரகுவரன்.
88
Raghuvaran
வில்லனாக அசத்தி வந்த இவரின் பதிப்புகளில் பாட்ஷா, முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் முதல்வன் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த எதிர்நாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.