கடந்த சில தினங்களுக்கு முன், பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும், சீரியல் நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா நடத்தி வரும் யூடியூப் தளத்திற்கு, 'வலைதள பேச்சு' பிஸ்மி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் சினிமா குறித்த பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது பயில்வான் ரங்கநாதன், தொடர்ந்து நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய அந்தரங்க தகவல்களையும், ஆபாசமாகவும் பேசி வருவது குறித்து பிஸ்மியிடம் கேள்வி எழுப்பி விமர்சித்து பேசினார்.