இன்டர்நேஷனல் கிரிஷ் என ரசிகர்களால் அன்பாக அழைப்படுபவர் ராஷ்மிகா. நடிகையாக அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி நடிகைக்கு நிராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
27
இவர் நடிப்பில், தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம், தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி... தமிழ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தார்.
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் 'டியர் காம்ரேட்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
47
தற்போது தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தமிழில் ஏற்கனவே கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது லீக் ஆகும் புகைப்படங்கள் மட்டும் அல்ல, ராஷ்மிகா வெளியிடும் புகைப்படங்களும் வேறு லெவலுக்கு ரீச் ஆகி வருகிறது.
67
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, விஜய்யுடன் செம்ம ஸ்டைலிஷாக பிங்க் நிற உடையில் ராஷ்மிகா எடுத்து வெளியிட்ட புகைப்படம் வேறு லெவலுக்கு ட்ரெண்ட் ஆனது.
இதை தொடர்ந்து, சில ஹிந்தி படங்களிலும் மும்முரமாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நீல நிற உடை அணிந்து ஈடுகொண்ட புகைப்படம் படு வைரலாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.