குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய கியூட் அழகால் ரசிகர்களை கவர்ந்து, பின்னர் கதாநாயகியாகவும் மாறியவர். 80 மற்றும் 90களில்... முன்னணி நடிகர்களாக இருந்த, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், அஜித் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னரும் தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
கணவர், குழந்தை என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த மீனா வாழ்க்கையில் மிக பெரிய இடியாய் இறங்கியது, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மீனாவின் கணவர் இறப்பு.
முழுமையாக கணவரின் நினைப்பில் இருந்து மீனா வெளியே வரவில்லை என்றாலும், குடும்பத்தின் அக்கறை... தோழிகளின் அரவணைப்பால் அதில் இருந்து மீண்டு வருகிறார்.
இதை தொடர்ந்து நடிகை மீனா தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், இவர் தன்னுடைய தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் நடிகை சினேகாவின் சகோதரி, பிரசன்னாவின் சகோதரி, ப்ரீத்தா ஹரி, வந்தனா ஸ்ரீகாந்த் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் மீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.