மறுபுறம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்களும் அவ்வப்போது லீக்கான வண்ணம் உள்ளன. அதன்படி நடிகைகள் மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, தொகுப்பாளினிகள் டிடி மற்றும் அஞ்சனா, நடிகர் அஜ்மல், பாடகி சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, கவர்ச்சி நடிகை கிரண், டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோரின் பெயர்கள் இதுவரை லீக் ஆகி உள்ளன. இதில் அதிகாரப்பூர்வமாக யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தான் தொடங்கப்படும், ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் இருந்ததன் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து அதே நடைமுறையை பின்பற்றி வருகிறது பிக்பாஸ் குழு.
இதையும் படியுங்கள்... பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் வாணி போஜன்... சின்னத்திரை நயன்தாரா குறித்து வெளியான ஷாக்கிங் சீக்ரெட்