சித்தி இத்னானி, குஜராத்தி மொழியில் வெளியான 'கிராண்ட் ஹாலி' என்கிற படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.
அதே ஆண்டு 'பிரேமா கதா சித்ரம் 2' படத்தில் நடித்த இவருக்கு, அடுத்தடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. இவரது நடிப்பும், திறமையையும் தமிழ் இயக்குனர்களையும் கவனிக்க வைத்த நிலையில், தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துள்ளார்.
எனவே அடுத்தடுத்த தமிழ் படங்களில் இவர் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியாவதற்கு முன்பாகவே, சித்தி இத்னானி, நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக... நூறு கோடி வானவில் என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்ட சித்தி இத்னானி, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்த போதிலும், ரசிகர்களை கிறங்கடிக்கும் விதமாக, விதவிதமான பிகினி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.