தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான கேங் லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குனர் நெல்சன், தனது இரண்டாவது படமான டாக்டரில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா.
24
இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த பிரியங்காவும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அடுத்ததாக டான் படத்துக்காக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார் பிரியங்கா.
34
டான் படமும் வசூலில் பட்டையை கிளப்பி ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் ஜெயம்ரவியின் 30-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். இதனிடையே நெல்சன் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ஜெயிலர் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடிப்பதாக பேச்சு அடிபட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் அந்த ரோலில் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்ததற்கான முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் தான் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி டாக்டர் படத்தில் நடித்தபோதே இயக்குனர் நெல்சனையும் தன்னையும் ஒப்பிட்டு கிசுகிசுக்கள் எழுந்ததாம். நட்பாக பழகி வரும் தங்களைப் பற்றி கிசுகிசுக்கள் எழுவதை விரும்பாத பிரியங்கா மோகன், அதன் காரணமாகவே ஜெயிலர் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.