நடிகர் சிம்பு நடித்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சிம்பு தன்னுடைய வழக்கமான கதை தேர்வில் இருந்து சற்று வித்தியாசமாக, இந்த கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். அதேபோல் கெளதம் மேனனும் இதுவரை இயக்கிய பட பாணியில் இருந்து விலகி இப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்திற்காக சிம்பு சுமார் 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து நடித்திருந்தார்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல் நாள் வசூல் அதிகபட்சமாக 12 முதல் 13 கோடி வரை தகவல் வெளியான நிலையில், இரண்டாவது நாளிலும் சுமார் 9 முதல் 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதை போல் 'வெந்து தணிந்த காடு' படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருவதாலும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும் கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.