நம்மை பார்த்து பாலிவுட்டே பயந்து நடுங்குது.... விக்ரம் 100-வது நாள் விழாவில் மார்தட்டிய கமல்ஹாசன்

Published : Sep 17, 2022, 12:04 PM IST

Kamalhaasan : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற விக்ரம் படத்தின் 100வது நாள் விழா கோவையில் நேற்று கொண்டாடப்பட்டது.

PREV
14
நம்மை பார்த்து பாலிவுட்டே பயந்து நடுங்குது.... விக்ரம் 100-வது நாள் விழாவில் மார்தட்டிய கமல்ஹாசன்

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தமிழ் சினிமாவே துவண்டு கிடந்த சமயத்தில் கடந்த ஜூன் மாதம், கோலிவுட்டுக்கே புத்துயிர் கொடுக்கும் வகையில் ரிலீசான படம் தான் விக்ரம். கமலின் தரமான கம்பேக் படமாக இது அமைந்திருந்தது. இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தான் தயாரித்து இருந்தார்.

24

தெலுங்குக்கு ஆர்.ஆர்.ஆர், கன்னடத்துக்கு கே.ஜி.எஃப் என ஒவ்வொரு திரையுலகும் கொண்டாடி வந்த சமயத்தில் தமிழுக்கு விக்ரம் என மார்தட்டி சொல்லும் அளவுக்கு கோலிவுட்டுக்கு பெருமை சேர்த்தது இப்படம். தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படமாக பாகுபலி 2 இருந்து வந்த நிலையில், அதன் சாதனையை ஒரே மாதத்தில் தட்டித்தூக்கி முதலிடம் பிடித்தது விக்ரம்.

இதையும் படியுங்கள்... எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்க இறுதிவரை போராடியவர் பெரியார் - கமல்ஹாசன் புகழாரம்

34

விக்ரம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடினாலே ஆச்சர்யம் தான். அப்படி இருக்கையில் 100 நாட்கள் ஓடி மகத்தான சாதனை படைத்துள்ளது விக்ரம். இப்படத்தின் 100வது நாள் விழா கோவையில் நேற்று கொண்டாடப்பட்டது.

44

இதில் கலந்துகொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது : “விக்ரம் படத்தை 100 நாட்களைக் கடந்து ஓட வைத்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து ஆதரியுங்கள். பாலிவுட்டே நம்மைப் பார்த்து பயப்படுகிறது. அவர்களின் பார்வை தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி உள்ளது என பெருமையுடன் கூறினார் கமல். அவரின் பேச்சை கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையும் படியுங்கள்... நூறாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில்... டாப் மோஸ்ட் கலெக்‌ஷனை அள்ளிய படம் விக்ரம் தான் - அடிச்சு சொன்ன பிரபலம்

Read more Photos on
click me!

Recommended Stories