Poonam Bajwa : பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் அதகளம் செய்து வரும் நடிகை கிரணுக்கு போட்டியாக தற்போது நடிகை பூனம் பஜ்வாவும் களமிறங்கி உள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூனம் பஜ்வா. சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து மூன்று ஆண்டுகள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
27
இவர் தமிழுக்கு அழைத்து வந்தது இயக்குனர் ஹரி தான். அவர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ரிலீசான சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் பூனம் பஜ்வா. இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
37
இதையடுத்து ஜீவாவுடன் சேர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த பூனம் பஜ்வா, தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை உணர்த்தும் விதமாக கச்சேரி ஆரம்பம் படத்தில் சற்று கிளாமராகவே நடித்திருந்தார்.
47
இதையடுத்து தமிழில் சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்து வந்த பூனம் பஜ்வா, சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியிருந்தார்.
பின்னர் சுந்தர் சி உடன் முத்தின கத்திரிக்காய், ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஓவர் கிளாமராக நடித்த இவருக்கு, தற்போது வயதும் கூடிவிட்டதால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது தமிழில் இவர் கைவசம் ஒரு படம் கூட இல்லை.
67
பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் அதகளம் செய்து வரும் நடிகை கிரணுக்கு போட்டியாக தற்போது நடிகை பூனம் பஜ்வாவும் களமிறங்கி உள்ளார். சமீப காலமாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.
77
வயசு கூடியதால் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், இரண்டு நடிகைகளும் கவர்ச்சியில் போட்டி போட்டு வருவது கோலிவுட்டில் பேசுபொருள் ஆகி உள்ளது. இதில் பூனம் பஜ்வாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.