சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என பெயரெடுக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் பேமஸ் ஆக இருந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்களும் கிடைத்தன.