சூர்யா எதற்கும் துணிந்தவன், படத்தை தொடர்ந்து கமலஹாசனின் விக்ரம் படத்தில் காமியோ ரோலில் தோன்றி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தார். அதை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று படத்திலும் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ள இவர் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் இணைந்துள்ளார். இதில் வாடிவாசல் படம் பல வருடங்களுக்கு முன்னதே அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென பாலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா, பிதாமகன் ஆகிய இரு படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்தது அதோடு நந்தா படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது என்று கூறலாம். முன்னதாக சாக்லேட் பாயாக வலம் வந்த சூர்யாவை அதிரடி நாயகனாக மாற்றியது நந்தா தான்.