வனிதா ஒரு நவீன பாஞ்சாலி.. ஜோவிகாவின் அப்பா இவர் தான்.. பயில்வான் ரங்கநாதன் கருத்தால் மீண்டும் சர்ச்சை..

Published : Oct 12, 2023, 04:48 PM IST

வனிதாவின் மகள் ஜோவிகா குறித்தும், வனிதா குறித்தும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.      

PREV
16
வனிதா ஒரு நவீன பாஞ்சாலி.. ஜோவிகாவின் அப்பா இவர் தான்.. பயில்வான் ரங்கநாதன் கருத்தால் மீண்டும் சர்ச்சை..

திரை பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்க விஷயங்களை பற்றி தொடர்ச்சியாக பல கருத்துகளை தெரிவித்து அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் தற்போது வனிதாவின் மகள் ஜோவிகா குறித்தும், வனிதா குறித்தும் அவர் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

26
vanitha

சில நாட்களுக்கு முன்பு, தனது 2 கணவர்களுடனும் தொடர்பில் இருப்பதாக வனிதா கூறியதை சுட்டிக்காட்டி பேசி உள்ள பயில்வான், அவரை நவீன பாஞ்சாலி என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் “ வனிதா தனது சமீபத்திய வீடியோவில் தனது 2 கணவர்களுடனும் தொடர்பில் இருப்பதாக பேசியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

36
vanitha

வனிதாவின் அப்பா விஜயகுமார், தனது 2 மனைவிகளின் கழுத்தில் கை போட்டபடி சிலை ஒன்றை வைத்துள்ளார். இதன் மூலம் தனக்கு 2 மனைவிகள் உள்ளனர் என்பதை அவர் உலகறிய செய்தார். அவருடைய மகள் இப்போது அதை செய்து கொண்டிருக்கிறார்.

46

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவின் மகள் ஜோவிகா ஒருமுறை பேசிய போது, நான் என் அப்பா பேச்சையும் கேட்க மாட்டேன். அம்மா பேச்சையும் கேட்கமாட்டேன். என் அம்மாவிற்காக 10 வயதில் போலீஸ் உடன் சண்டை போட்டேன் என்று சொன்னார். அதே நேரத்தில் வெளியே லைவில் பேசிய வனிதா, ஆகாஷ் தான் ஜோவிகாவின் அப்பா என்று கூறினார்.

56
Vanitha Vijayakumar

ஆனால் வனிதாவின் இரண்டாவது கணவர், ஜோவிகா ஆகாஷுக்கும் பிறக்கவில்லை, தனக்கும் பிறக்கவில்லை. வேறொருவருக்கு பிறந்தது என்று சொல்கிறார். அப்படி எனில் ஜோவிகாவின் தந்தை யார் என்ற விஷயம் வனிதாவுக்கு மட்டுமே தெரியும்” என்று பயில்வான் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், வனிதா இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

2 கணவர்களோடும் தொடர்பில் தான் இருக்கிறேன்... ஜோவிகாவின் தந்தை இவர் தான் - சர்ச்சைகளுக்கு வனிதா விளக்கம்
 

66

தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா பங்கேற்றுள்ளார். அடிப்படை கல்வியை திணிக்க வேண்டாம் என்று ஜோவிகா வனிதாவுடன் சண்டையிட்டது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. ஜோவிகாவின் கருத்துக்கு 2k கிட்ஸ் ஆதரவு தெரிவித்தாலும், அடிப்படை கல்வி அவசியம் என்று பலரும் பதிவிட்டனர். அப்போது ஜோவிகா தமிழ் படிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்ட வனிதா, அவரின் தந்தை இதனை அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார் என்றும் கூறியிருந்தார். மேலும் ஜோவிகாவின் தந்தை ஆகாஷ் தான் எனவும், அவரின் இன்ஷியலை தான் ஜோவிகா பயன்படுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories