சம்பளத்தை மறைத்த விஜய்.. மடக்கிய வருமான வரித்துறை! ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

First Published | Oct 11, 2023, 9:42 AM IST

புலி பட சம்பளத்தை மறைத்ததற்காக வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

vijay

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய், இவர் கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த வருடத்திற்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியது.

Thalapathy vijay

அந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை ஒப்பிட்டு பார்த்ததில், நடிகர் விஜய் புலி படத்திற்காக வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருமானத்தை மறைத்ததன் காரணமாக நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos


Tax evasion case

வருமான வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், கடந்த 2019-ம் ஆண்டே விதித்திருக்க வேண்டும், தற்போது காலதாமதமாக வருமான வரித்துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Actor vijay

இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு கடந்தாண்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதன்பின்னர் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ததை அடுத்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற அக்டோபர் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... லியோ பட டான்சர்களுக்கு சம்பளம் கொடுத்தாச்சு... பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

click me!