பிரபுதேவா சாயலில் இருப்பதால் தான் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சாங்களாம்..! பிரபலம் சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்

First Published | Oct 10, 2023, 1:43 PM IST

விக்னேஷ் சிவன் ஒரு சாயலில் பிரபுதேவா போல இருப்பதன் காரணமாக தான் நடிகை நயன்தாரா அவரை காதலித்ததாக பிரபலம் ஒருவர் கூறி உள்ளார்.

nayanthara, vignesh shivan, Prabhu deva

கேரளாவை சேர்ந்தவரான நயன்தாரா, ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நயன்தாராவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா, எந்த அளவுக்கு பேமஸ் ஆக இருந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.

nayanthara, vignesh shivan

நடிகை நயன்தாரா வல்லவன் படத்தில் நடித்தபோது நடிகர் சிம்புவை காதலித்தார். அந்த சமயத்தில் இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியதால் சிம்பு உடனான காதலுக்கு எண்டு கார்டு போட்டார் நயன். இதன்பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய நயன்தாரா, அடுத்ததாக நடன இயக்குனர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார்.

Tap to resize

nayanthara, vignesh shivan romantic photo

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள பிரபுதேவாவை நயன்தாரா காதலித்தது அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடால் நயன்தாராவின் இந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இதன்பின்னர் காதலே வேண்டாம் என இருந்த நயன்தாரா, நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார்.

nayanthara, vignesh shivan kids

7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. வாடகைத்தாய் மூலம் அவர்கள் இந்தக் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இந்த குழந்தைகள் பிறந்து ஓராண்டு ஆகிறது. சமீபத்தில் தான் நயனும் விக்கியும் மலேசியாவில் தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.

Rahul Thatha

இந்த நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரபுதேவா போல் இருப்பதால் தான் அவரை காதலித்ததாக நடிகர் உதய பாணு பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். நானும் ரெளடி தான் படத்தில் ராகுல் தாத்தா என்கிற கேரக்டரில் நடித்து பிரபலமான உதய பாணு, அப்பட ஷூட்டிங்கின்போது விக்னேஷ் சிவனை அழைத்து, உன்னுடைய நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது பிரபு தேவா போல் இருக்கிறது என சொன்னாராம். அதேபோல் நயன்தாராவிடமும், விக்னேஷ் சிவனை பார்க்கும்போது பிரபு மாஸ்டர் மாதிரி இருக்குலம்மானு சொல்லி இருக்கிறாராம். இதனால் தான் நயன்தாராவுக்கு விக்கி மேல லவ் வந்ததாகவும், அவர்களின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நான் தான் என பில்டப் கொடுத்து பேசி இருக்கிறார் உதய பாணு.

இதையும் படியுங்கள்...  அவளோடிருக்கும் ஒருவித சினேகிதன் ஆனேன்... நடு ரோட்டில் நயன் உடன் விக்கி எடுத்த ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!