ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் ஜெயிலர். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இதற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ஜாபர் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வில்லனாக விநாயகன் மிரட்டியிருந்த இப்படத்தில் ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோர் ரோலில் நடித்திருந்தனர்.
24
Rajini, vijay
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனதில் இருந்து பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. தமிழ்நாட்டை போல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்படத்தின் வசூல் உச்சத்தை தொட்டது. இதுமட்டுமின்றி வெளிநாட்டில் இப்படத்திற்கு வசூல் மழை பொழிந்தது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஜெயிலர் படத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அதனால் ஜெயிலர் படத்தின் லைப் டைம் கலெக்ஷன் விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ.635 கோடி வசூலித்து உள்ளதாம். அதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.205 கோடி வசூலித்துள்ள இப்படம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.88 கோடியும், கேரளாவில் ரூ.58.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.71.5 கோடியும் வசூலித்து உள்ளது. இதுதவிர இந்தியாவில் எஞ்சியுள்ள மாநிலங்களில் ரூ.17 கோடி கலெக்ஷனை அள்ளி உள்ளது ஜெயிலர்.
44
Director Lokesh Kanagaraj, Vijay
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக வெளிநாடுகளில் மட்டும் இப்படம் ரூ.195 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாம். ஜெயிலர் படம் வசூலித்துள்ள 635 கோடியை வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மூலமே லியோ படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், தியேட்டரில் ரிலீசான பின் அதன் வசூல் தாறுமாறாக இருக்கும் என திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.