ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து... எச்சரித்த உளவுத்துறை - பாலிவுட் பாட்ஷாவுக்கு இனி Y+ பாதுகாப்பு வழங்க உத்தரவு..!

Published : Oct 09, 2023, 08:37 AM IST

தொடர்ச்சியாக இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

PREV
14
ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து... எச்சரித்த உளவுத்துறை - பாலிவுட் பாட்ஷாவுக்கு இனி Y+ பாதுகாப்பு வழங்க உத்தரவு..!
Shah rukh khan

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதன்மூலம் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூல் அள்ளிய திரைப்படங்களை கொடுத்த ஒரே ஹீரோ என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார் ஷாருக்கான்.

24
Jawan movie Shah Rukh Khan

ஜவான், பதான் படங்களின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் டங்கி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Y plus security

அந்த வகையில் ஷாருக்கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஷாருக்கானுக்கு எப்போதும் ஆறு துப்பாக்கி ஏந்திய போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஷாருக்கானின் இல்லத்திலும் நான்கு ஆயுதம் ஏந்திய போலீசார் எப்போதும் பாதுகாப்பில் இருப்பர்.

44
Y plus security Shah Rukh Khan

ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிளஸ் பாதுகாப்பில் உள்ள கமாண்டோக்களிடம் எம்பி-5 இயந்திர துப்பாக்கிகள், ஏகே-47 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் க்ளோக் பிஸ்டல்கள் ஆகியவை இருக்குமாம். அவரது இரண்டு திரைப்படங்களின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஷாருக்கானின் உயிருக்கு அச்சுறுத்தல் கணிசமாக அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதாக வி.ஐ.பி பாதுகாப்புக்கான சிறப்பு ஐ.ஜி. திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 'லியோ' படத்திற்கு முதலில் லோகேஷ் கனகராஜ் வைத்தது இந்த இந்த தலைப்பு தானாம்! ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு பாஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories