'லியோ' படத்திற்கு முதலில் லோகேஷ் கனகராஜ் வைத்தது இந்த இந்த தலைப்பு தானாம்! ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு பாஸ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக 'லியோ' படத்திற்கு முதலில் என்ன தலைப்பு வைக்கப்பட இருந்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
Leo Release:
தளபதி விஜய் நடிப்பில், அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில், பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது 'லியோ'. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
Leo Interesting Facts:
ஏற்கனவே 'லியோ' படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்ய பட்ட நிலையில். இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் ஒன்றை நடத்த உள்ளதாக சமீபத்தில் பட குழு அறிவித்தது. மேலும் அவ்வப்போது, ரசிகர்களை கவரும் விதத்தில் படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Audio Launch Cancel
குறிப்பாக சமீபத்தில் வெளியான லியோ படத்தின் ட்ரைலர், படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் நேர்த்தியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செதுக்கி உள்ளார் என ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். அதே போல் படத்தில் எதிர்பாராத பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Leo Promotions:
திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் 'லியோ' படம் குறித்து யாருக்கும் தெரியாத பல தகவல்களை பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
Director Lokesh Kanagaraj
அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் 'லியோ' படத்திற்கு முதல் முதலில் வைக்க இருந்த தலைப்பு குறித்து லோகேஷ் கனகராஜ் பேசி உள்ளார். இந்த படத்தின் கதையை எழுந்து போது ஆண்டனி என்று தான் பெயர் வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருந்தாராம். அதன் பின்னர் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்கள் இதே பெயரில் வெளியாகி உள்ளதால், 'லியோ' என்று தலைப்பிட முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.