பிக் பாஸ் 7.. எலிமினேட் ஆகப்போவது அனன்யா இல்லையாம்.. அந்த நடிகர் தானாம்? - இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!
Ansgar R |
Published : Oct 07, 2023, 09:46 PM IST
இந்திய மொழிகள் பலவற்றில் வெற்றிகரமாக ஓடிவரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 18 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே, உள்ளே சென்ற 18 போட்டியாளர்களும் பலவிதத்தில் கண்டெண்ட்களை கொடுத்து வருவது விஜய் டிவியை மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி படுத்தியிருக்கிறது என்று நான் கூற வேண்டும்.
குறிப்பாக நேற்று ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கமலஹாசன் அவர்கள் இருவருக்கும் பாதகம் இல்லாத வகையில் அந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் வார எலிமினேஷன் பணிகள் துவங்கியுள்ள நிலையில் நிகழ்ச்சியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் குறைந்த அளவிலான சுவாரசியத்தை கொடுக்கின்ற போட்டியாளர்கள் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெறுவார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அந்த வகையில் இந்த வாரம் நடைபெறும் எலிமினேஷனில் நடிகரும் எழுத்தாளருமான பாவா செல்லதுரை, பெப் சிரிஸ் நடிகர் பிரதீப் ஆண்டனி, நடிகை அனன்யா ராவ், ரவீனா, ஐசு, பிரபல பாடகரும் நடிகருமான யுகேந்திரன் மற்றும் ஜோவிகா ஆகிய ஏழு பேர் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றனர். இதில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அனன்யா தான் வெளியேற போவதாகவும், அவருக்குத்தான் குறைந்தபட்ச வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
44
Yugendran
ஆனால் தற்பொழுது கிடைத்திருக்கும் சில தகவல்களின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இருந்து முதலில் வெளியாகப் போகும் போட்டியாளராக பிரபல நடிகரும் பாடகருமான யுகேந்திரன் அவர்கள் தான் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் யுகேந்திரன் தான் இந்த வாரம் எலிமினேட்டாக போவதாக கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது ஆண்டவர் கார்டை எடுத்து காட்டிய பிறகு தான் தெரியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.