மாஸ் காட்டும் தளபதி.. விஜய் முதல் சஞ்சய் தத் வரை.. லியோ படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் இதோ..

First Published | Oct 7, 2023, 6:01 PM IST

லியோ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பள விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Leo

இந்த ஆண்டின் அதிக எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான லியோ படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆக்‌ஷ்ன் - த்ரில்லர் படமாக உருவாகி உள்ள லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

leo

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் அவரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், படக்குழுவினர் கடந்த 5-ம் தேதி லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், குறைந்த நாட்களில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லராக மாறி உள்ளது. தற்போது வரை இந்த ட்ரெய்லரை சுமார் 38 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த ட்ரெயலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Leo Movie Trailer Likes

இந்த நிலையில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் லியோ படம் ப்ரீமியர் ஷோவாக வெளியாக உள்ளது. 1000 திரையரங்குகளில் இந்த படத்தின் ப்ரீமியர் ஷோ வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சிறப்பு காட்சிகள் வழங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன் தினமே ப்ரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் லியோ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பள விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கோடிக்கணக்கான ரசிகர்களின் ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். லியோ படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ.120 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. இந்த படத்தில் நடிக்க த்ரிஷா ரூ.5 கோடி சம்பளம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் மீண்டுமா.. லியோ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. 1300 நடன கலைஞர்களுக்கு சம்பள பாக்கி? - என்ன பிரச்சனை?
 

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் "லியோ" படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் 8 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leo Movie Decoding

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் , "லியோ" படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leo review mind blowing film Gautam Vasudev Menon reveals

அதே போல் நடிகை பிரியா ஆனந்த இந்த படத்தில் நடிக்க ரூ.50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோருக்கு ரூ. 30-70 லட்சம் வரை சம்பளம் .வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!