அஜித்தின் 62-வது படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷா கமிட் ஆகி உள்ளார். விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அஜித்தின் வலிமை, துணிவு ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் விடாமுயற்சி படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
24
Ajith, Trisha
விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக கடந்த சில மாதங்களாக ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு அக்டோபர் மாதம் தான் குட் நியூஸ் கிடைத்தது. அதன்படி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து துபாய், அபுதாபியிலும் ஷூட்டிங் நடத்திவிட்டு இறுதியாக தான் சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸ் முதலில் கமிட் ஆகி இருந்தார். பின்னர் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் கடந்த மாதம் இப்படத்தில் இருந்து அர்ஜுன் தாஸ் விலகினார். அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் ஆரவ், வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இவர் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார்.
44
Huma Qureshi, Regina Cassandra
வில்லன் ரோலில் மாற்றம் ஏற்பட்டது போல் தற்போது இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருந்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விலகியதால் அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசெண்ட்ரா கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இருந்து விலகிய ஹூமா குரேஷி இதற்கு முன் அஜித்துடன் வலிமை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.