தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதன்பின்னர் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் லோகேஷை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. அப்படத்தின் ரிசல்ட் பார்த்ததும் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுக்கு கால்ஷீட் கொடுத்தார்.
24
Rolex
இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், பின்னர் தன்னுடைய குருவான கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்து, அவருக்கு விக்ரம் என்கிற இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுத்தார். தொடர்ந்து 4 வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இப்படி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் இவர் இயக்கத்தில் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அப்படி லோகேஷின் படத்தில் நடிக்க ஆசையோடு இருப்பவர்களை ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்து வரும் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடியில் பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜியின் மகன் சிக்கியதன் மூலம் தான் உண்மை தெரியவந்துள்ளது.
44
Brahmaji, Lokesh kanagaraj
லோகேஷ் கனகராஜின் மேனேஜர் எனப்பேசி மோசடி செய்யும் அந்த கும்பல், பிரம்மாஜியின் மகனை விக்ரம் 2 படத்தில் ரோலெக்ஸின் தம்பியாக நடிக்க வைப்பதாக கூறி உள்ளனர். இதற்காக ஆடிஷனுக்கு போட்டோ கேட்டுள்ளனர். போட்டோவை அனுப்பியதும் உடைகள் வாடகைக்கு வாங்க 30 ஆயிரம் பணம் தருமாறும், ஆடிஷன் முடிந்ததும் அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறி இருக்கின்றனர். அதை நம்பி அவரும் பணத்தை அனுப்பி இருக்கிறார். பணம் வந்ததும் செல்போனை சுவிட் ஆஃப் செய்துவிட்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகி உள்ளது. இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததாக பிரம்மாஜியின் மகன் கூறி இருக்கிறார்.