திருமணத்தை மீறிய உறவு.. பிரபல நடிகரின் விவாகரத்துக்கு காரணமாகி சர்ச்சையில் சிக்கிய டாப் நடிகை..

First Published | Oct 6, 2023, 4:19 PM IST

நயன்தாராவின் திரை வாழ்க்கை, வெற்றிகரமானதாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சிக்கல்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாகவே உள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், நயன்தாரா தொடர்ந்து நயன்தாரா 75 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். நயன்தாராவின் திரை வாழ்க்கை, வெற்றிகரமானதாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சிக்கல்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாகவே உள்ளது. நயன்தாராவின் காதல் உறவு, பிரபல நடிகரின் விவாகரத்துக்கே வழிவகுத்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Jayam Ravi Nayanthara Iraivan collection report out

நயன்தாரா மற்றும் சிம்பு காதல் உறவு அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வல்லவன் படத்தில் பணிபுரியும் போது இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும், உறவு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். நயன்தாரா அந்தரங்க புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்தது இந்த பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு, சிம்புவுடன் எந்தப் படத்திலும் ஜோடி சேர மாட்டேன் என்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு வில்லு படத்தில் பணிபுரியும் போது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உண்மையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று வதந்திகள் வந்தன, இருப்பினும் இருவரும் வதந்திகளை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவில்லை. ஆனால் பொது நிகழ்ச்சிக்கு ஒன்றாக செல்வது, பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தியது என வெளிப்படையாக பல செயல்களை செய்தார். மேலும் பிரபுதேவாவும் நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்தார்.

nayanthara

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமான போதிலும், நயன்தாரா மீதான தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். எனினும் பிரபுதேவாவின் மனைவி அவர், றொரு நடிகையுடன் உறவில் இருப்பதாகவும், தனது குடும்பத்தை புறக்கணித்ததாகவும் கூறி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் சர்ச்சை வெடித்தது. பல சர்ச்சைகளுக்குப் பிறகு, பிரபுதேவாவும் லதாவும் விவாகரத்து செய்து கொண்டனர்.

nayanthara

இதற்கிடையில், நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். இறுதியில், பிரபுதேவாவும் நயன்தாராவும் 2011இல் பிரிந்தனர். நயன்தாரா திருமணம் செய்து கொள்ள கேட்ட போது, பிரபுதேவா அதை தள்ளிப்போட்டதாகவும் அவர்கள் பிரிந்ததற்கு இதவும் முக்கிய காரணம் என்றும் அப்போது கூறப்பட்டது.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 2015 ஆம் ஆண்டு இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். இருவரும் அப்போது முதலே காதலித்து வந்த நிலையில் அப்போதே பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்..

நீளமான டிரஸ் தான்.. ஆனாலும் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் கவர்ச்சியில் இளம் நாயகி - நிதி அகர்வாலின் Hot Photos!
 

கடந்த ஆண்டு அக்டோபர் 2022 இல், வாடகைத் தாய் மூலம் பெற்றோரானதாக இருவரும் அறிவித்தனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற  இரட்டை மகன்கள் உள்ளனர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் தங்கள் மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!