தனது நடிப்பாலும், காலத்தால் அழியாத தனது வசீகர அழகாழ்லும் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா. இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆவார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 180 க்கும் மேற்பட்ட படங்களில் ரேகா நடித்துள்ளார். தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரம் அறிமுகமான ரேகா, பாலிவுட்டில் எண்ணற்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
குப்சூரத் (1980), பசேரா (1981), உம்ராவ் ஜான் (1981), ஏக் ஹி பூல் (1981), கலியுக் (1981), சில்சிலா (1981), விஜேதா (1982), ஜீவன் தாரா (1982) உள்ளிட்ட பல படங்களில் ரேகா கவனம் ஈர்த்தார்.. எனினும் அகர் தும் நா ஹோடே (1983), உத்சவ் (1984), கூன் பாரி மாங் (1988) ஆகிய படங்கள் பாலிவுட்டில் அவரை மிகவும் வெற்றிகரமான நடிகையாக மாற்றின. இதனால் பாலிவுட்டில் 80, 90களில் உச்ச நடிகையாக மாறினார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடிகை ரேகா தனது 69-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்தும் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் பார்க்கலாம்.
ரேகாவின் சொத்து மதிப்பு : நடிகை ரேகாவின் சொத்து மதிப்பு சுமார் 332 கோடி ரூபாய் எண்று கூறப்படுகிறது. ஒரு படத்தில் நடிக்க ரூ.14 கோடி சம்பளம் வாங்கிய ரேகா, விளம்பரங்கள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகள் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். ஹீரோயினாக உச்சத்தில் இருந்த காலத்தில் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களில் ஒருவராக ரேகா இருந்தார். ரேகா 2012 இல் ராஜ்யசபா எம்.பி.யாகவும் ஆனார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிற சொத்துக்கள் : ரூ. 25 கோடி மதிப்புள்ள மற்ற சொத்துக்களை ரேகா வைத்திருக்கிறார். மேலும் விலை உயர்ந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவை, தங்க நகைகளையும் அவர் வைத்துள்ளார். மும்பையில் உள்ள பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்டில் அமைந்துள்ள ஒரு பங்களாவில் வசிக்கிறார். சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஃபர்ஹான் அக்தர் போன்ற பாலிவுட் பிரபலங்களும் அதே பகுதியில் தான் வசித்து வருகின்றனர்.
இவை தவிர பல ஆடம்பர சொகுசு கார்களும் ரேகாவுக்கு சொந்தமாக உள்ளன. ரூ. 2.17 கோடி மதிப்புள்ள Mercedez-Benz S-Class, ரூ. 1.63 கோடி மதிப்புள்ள Audi A8 ஆகிய கார்களை அவர் வைத்துள்ளார். மேலும் ஹோண்டா சிட்டி மற்றும் BMW i7 எலக்ட்ரிக் சொகுசு செடான் உள்ளிட்ட சொகுசு வாகனங்களை ரேகா வைத்திருக்கிறார். ரூ.6.01 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வைத்திருக்கும் சில பாலிவுட் நட்சத்திரங்களில் ரேகாவும் ஒருவர்.
நடிகை ரேகா 1990-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த முகேஷ் அகர்வால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே அவரின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த காலக்கட்டம் ரேகாவின் வாழ்வில் மிக மோசமான காலக்கட்டம் ஆகும். பல பத்திரிகைகளை ரேகாவை சூனியக்காரி, கொலைகாரி என்று விமர்சித்து எழுதின. இதனிடையே ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சனை ரேகா காதலிப்பதாக வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.