திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக இங்கு வாழ முடியாது என்று கருதி சிங்கப்பூரில் நல்ல வேலை பார்த்துவந்த ஷிவின் அந்த வேலையை விட்டு தனது பாலினத்திற்காக ஓடி ஒளியவேண்டாம் என்று கருதி மீண்டும் இந்தியா திரும்பினார். மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வமிருந்த ஷிவினுக்கு கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவின், தனது நடவடிக்கைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. கடந்த சீசனில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3-வது இடம் பிடித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திரைப்படங்களில் திருநங்கை கதாப்பாத்திரத்திற்கு ஆண்களை நடிக்க வைப்பதற்கு பதில், நடிப்பில் ஆர்வமாக திருநங்கைகளையே நடிக்க வைக்கலாம் என்று அவர் கூறி வருகிறார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறக்கு அவருக்க்கு பெரியளவில் பட வாய்ப்புகள் இன்னும் வரவில்லை.
முன்னதாக 2021-ம் ஆண்டு ஸ்பெயின் நடைபெற்ற மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் ஷிவின். அதன்பிறகே விளம்பரம் மற்றும் மாடலிங் துறையில் ஷிவினுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் ஷிவினின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் நடிகைகளை மிஞ்சும் வகையில் கிளாமர் உடையில் போட்டோஷூட் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.