
சன் டிவியில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியலான 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கவுள்ள எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் மாஸ் என்ட்ரி குறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். ஜனனி என்கிற பெண்ணை வைத்தே இந்த சீரியலின் அறிமுக காட்சிகள் இருந்தாலும், 10-ஆவது எபிசோடில் தான், தோன்றினார் இந்த சீரியலின் ஆணி வேறாக பார்க்கப்பட்டு வரும் குணசேகரன்.
ஆணாதிக்கம் கொண்ட ஒரு மனிதன். தன்னுடைய அம்மாவை வைத்தே, வீட்டில் உள்ள பெண்களை உருட்டி மிரட்டிக்கொண்டு இருக்கிறார். தன்னுடைய தம்பிகளையும் கை பாவை போல் ஆட்டி வைக்க நினைக்கிறார். ஆனால் மூன்றாவது மருமகளாக உள்ளே வரும் ஜனனியால் குணசேகரன் வீடு சற்று ஆட்டம் காணுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒரு கட்டத்தில் ஜனனியை வீட்டை விட்டே வெளியேற்ற குணசேகரன் திட்டம் போடும் நிலையில், பல வருடமாக யாரிடமும் பேசாமல் இருந்த அப்பத்தா பேச துவங்கியதோடு, ஜனனியின் துணையோடு இந்த வீட்டில் பல மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறார். அந்த வகையில் அப்பத்தா எதிர்பார்த்தது போல் குணசேகரனுக்கு எதிராக பெண்கள் பேச துவங்கியுள்ளனர். சொத்து பிரச்னையாலும் குணசேகரன் மிகவும் நொந்து போனார்.
விறுவிறுப்பான கதைக்களத்தில் சீரியல் சென்று கொண்டிருந்த போது தான்... குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் சில வாரங்களாகவே அவர் இல்லாமல், வேறு ஒரு கோணத்தில் சீரியல் கொண்டு செல்லப்பட்டது. எனவே இனி குணசேகரன் வருவாரா? மாட்டாரா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், இன்றைய தினம் அதிரடியாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் - எழுத்தாளருமான வேல ராம மூர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார்.
Jayadevi Passed Away: இயக்குனர் வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவியும் - நடிகையுமான ஜெயதேவி காலமானார்!
போலீசார் கதிர் மற்றும் ஞானத்திடம் பொது இடத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி மற்றும் சக்தி இருவரும் அவர்களுடன் சென்றுள்ளதால், நந்தினியிடம்... ஜனனிக்கு போன் செய்து அங்கு என்ன நடக்கிறது என்பதை கேட்குமாறு ஈஸ்வரியின் தந்தை கூற, அதெல்லாம் அவங்களே சொல்லுவாங்க என கூறுகிறார். பின்னர் அங்கு நடக்கும் பிரச்சனையால் ஆவேசமான நந்தினி, இப்போ உங்க புள்ள இங்க வந்து ஆகணும் என விசாலாட்சியிடம் கூறுகிறது.
இதை தொடர்ந்து போலீசாரிடம் கொஞ்சம் ஓவராக வாயை விட்டு, கதிரும் - ஞானமும் தர்மஅடி வாங்க... கருப்பு நிற ஜீப்பில் செம்ம கெத்தாக என்ட்ரி கொடுக்கிறார் குணசேகரன். ஏய் என மிரட்டல் குரலால் சத்தமிட்டபடி ஜீவை விட்டு இறங்குகிறார் புதிய குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தி. இதன் மூலம் இன்று முதல் குணசேகரனினின் காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகும் என்பது தெரிகிறது.