யம்மாடியோவ்.. நடிகைகளின் திருமண உடையின் விலை இத்தனை லட்சமா? அதிலும் ஐஸ்வர்யா ராய் தான் டாப்..!

Published : Oct 04, 2023, 03:56 PM IST

இந்தியாவில் திருமணம் என்பதே ஆடம்பரமான நிகழ்வு. அதிலும் திரை நட்சத்திரங்களின் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும். இந்தியாவில் உள்ள டாப் நடிகைகளி தங்கள் திருமண உடைக்கு எத்தனை லட்சம் செலவு செய்துள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.  

PREV
19
யம்மாடியோவ்.. நடிகைகளின் திருமண உடையின் விலை இத்தனை லட்சமா? அதிலும் ஐஸ்வர்யா ராய் தான் டாப்..!

ஐஸ்வர்யா ராய் பச்சன்:

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இரும் ஏப்ரல் 20, 2007 அன்று மிகவும் அமைதியான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஐஸ்வர்யா ராயின் திருமண ஆடை மிகவும் விலை உயர்ந்த ஆடைகளில் ஒன்றாக உள்ளது. ஆம். அவரின் திருமண் ஆடையின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். நீதா லுல்லா என்ற ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய் அவரின் பாரம்பரிய காஞ்சிபுரம் புடவையில் அழகான தங்க பார்டர், படிகங்கள் மற்றும் உண்மையான தங்கத்தின் நூல் வேலைப்பாடு ஆகியவை இடம்பெற்றிருந்தன.

29

ஷில்பா ஷெட்டி : ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஷில்பா தருண் தஹிலியானி வடிவமைத்த பாரம்பரிய சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார், அதில் 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டன. இந்த திருமண உடை தயாரிக்க சுமார் 50 லட்சம் செலவானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

39

அனுஷ்கா ஷர்மா : அனுஷ்கா ஷர்மா 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தில் அணிந்திருந்தா லெஹங்காவில் நிஜ இளவரசி போல் காட்சியளித்தார். இவரின் திருமண உடையின் மதிப்பு ரூ.30 லட்சமாகும்.

49

பிரியங்கா சோப்ரா : கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் 2 முறைகளிலும் திருமணம் செய்தார். எனவே, அவரது திருமண இரவில், அவர் ஒரு சிந்தூர் சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தார். அதன் விலை 13 லட்சம்.

59

தீபிகா படுகோன் : தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இத்தாலியின் லேக் கோம்போவில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் சிந்தி மற்றும் கொங்கனி ஆகிய இரண்டு கலாச்சார முறைகளிலும் திருமணம் செய்து கொண்டனர். சிந்தி முறை திருமணத்திற்காக தீபிகா படுகோன் அணிந்த லெஹாங்காவின் விலை சுமார் 13 லட்சம்.

69

ஆலியா பட் : ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் செய்துகொண்டபோது அவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. குறிப்பாக ஆலியாவின் திருமண புடவை தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பல பிரபலங்கள் லெஹெங்காஸில் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆலியா பட்டின் வெளிர் நிற ஆர்கன்சா புடவை அவரது ரசிகர்களை கவர்ந்தது. இதன் விலை ₹50 லட்சம் என கூறப்படுகிறது.

தபு முதல் நயன்தாரா வரை.. ஏற்கனவே திருமணமான ஆண்களுடன் ரகசிய உறவு வைத்திருந்த நடிகைகள்..
 

79

சோனம் கபூர் : அனுராதா வக்கீல் வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்காவை சோனம் கபூர் அணிந்திருந்தார். அதன் விலை ₹70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய நகைகள், தங்கக் கலர் மற்றும் அழகான தலை அணிகலன்களுடன் அவர் இந்த ஆடையை அணிந்திருந்தார்.

89

கத்ரீனா கைஃப் : கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நடந்த போது அனைவரின் கவனமும் கத்ரீனாவின் திருமண உடை மீது தான் இருந்தது. 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற சப்யசாச்சி லெஹங்காவை அவர் அணிந்திருந்தார். .

99

நயன்தாரா : கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. நயன்தாரா ஜேட் மோனிகா  வடிவமைத்த  வெர்மில்லியன் சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். முழுக்க எம்பிராய்டரி செய்யப்பட்ட பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் அதன் ரூ.25 லட்சம் என்று கூறப்படுகிறது. 

click me!

Recommended Stories