இதை தொடர்ந்து படிப்பு குறித்து மிகப்பெரிய விவாதமே பிக்பாஸ் வீட்டில் நடந்தது. குறிப்பாக கமல்ஹாசன் படிக்க வேண்டும் என்கிற விதி இருக்கலாம் ஆனால் கல்வி வதை இருக்க கூடாது என கூறினார். அதே சமையம் படிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதையும் ஆணி தனமாக தெரிவித்தார் கமல். மக்கள் பலரும், விசித்ராவுக்கு ஆதரவாகவே தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர். காரணம் படிக்காமல் 4 பேர் வாழக்கையில் உயர்த்திருக்கலாம், ஆனால் 40 பேர் படித்து தான் முன்னணி இடத்திற்கு வந்துள்ளனர். இதற்க்கு அம்பேத்கர், காந்தி, ராதா கிருஷ்ணன், மற்றும் பலரை உதாரணமாகவும் கூறினார்கள்.