ரவி மோகன் ஆர்த்தியுடன் வாழ்ந்த போது, ஈசிஆரில் உள்ள ஒரு பங்களாவை தன்னுடைய மனைவி ஆர்த்தியின் பெயரில் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பங்களாவுக்கு மாத மாதம் செலுத்த வேண்டிய ஈ எம் ஐ தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி அதிகாரிகளுக்கு போக்கு காட்டி வந்தார். இது குறித்து பதில் அளிக்குமாறு பலமுறை கடிதம் மூலம் தகவல் அனுப்பியும், ரவி மோகன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் சுமார் 11 மாதங்கள் முறையாக தவணை கட்டாத நிலையில், கடந்த மாதம் வங்கி அதிகாரிகள் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் ஓட்ட வந்தபோது அதனை அனுமதிக்காத ரவி மோகன் வங்கி அதிகாரிகளிடம் நேரடியாக வந்து பேசுவதாக கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.