தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட பிரபலமும், இயக்குனருமான, அருண்ராஜா காமராஜ், தற்போது ஆடி கார் வாங்கியுள்ளதற்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாக தன்னுடைய திரை பயணத்தை துவங்கி, பின்னர் பாடகர், பாடலாசிரியர் என மெல்ல மெல்ல, முன்னேறி தற்போது இயக்குனராகவும் ஜெயித்து காட்டியுள்ளவர் அருண்ராஜா காமராஜ்.
26
பெண்களின் கிரிக்கெட் பற்றி இந்தியாவிலேயே முதல் முதலில் படம் எடுத்த இயக்குனர் என்கிற பெருமையோடு, இவர் இயக்கிய 'கனா' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு... இந்த படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் லாபத்தை பெற்று தந்தது.
இந்த படத்திற்கு பின்னர், சமீபத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' என்கிற படத்தை இயக்கினார். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான ஆர்டிகள் 15 ரீமேக்காக எடுக்கப்பட்ட இந்த படமும், சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.
46
தற்போது 'அமெரிக்கன் மாப்பிள்ளை' என்கிற வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த வெப் தொடரின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க, தற்போது அருண் ராஜா காமராஜ் தான் வாங்க ஆசைப்பட்ட ஆடி காரை அதுவும்,ஆடி மாதத்திலேயே வாங்கியுள்ளார். காரின் பக்கத்தில் நின்றபடி தன்னுடைய அம்மாவுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
66
இவர் கார் வாங்கியதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.