தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அதிகம் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வந்தாலும், இவர் ராஷ்மிகாவை இவர் காதலிக்கிறாரா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இவர்கள் காதல் குறித்த வதந்தி நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை இருவருமே தொடர்ந்து நிராகரித்து வந்தனர்.
ஆனால் தற்போது அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான தொடர்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல், மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா யாருடன் டேட்டிங் செய்கிறார் என்று அனன்யாவிடம் கரண் ஜோஹர் கேள்வி எழுப்பியபோது, அவர் விஜய்யைப் பற்றி கூறி மறைமுகமாக ராஷ்மிக்கா மந்தனாவை பற்றி போட்டுடைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி!
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த போது, அவர்களது காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுவே இவர்கள் காதல் வதந்தியை சிக்க காரணமாகவும் இருந்தது.
தற்போது இந்த வதந்தியை உறுதி செய்யும் விதமாக அனன்யா பாண்டே, மறைமுகமாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் டேட் செய்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் தற்போது டோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.