பிரம்மாண்டமாக தயாரான தி லெஜண்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. குறிப்பாக 2500 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட்டது. இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் இப்படம் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் எதிர்பார்த்ததை விட வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.