தீபாவளி ரேஸில் குதித்த சிவகார்த்திகேயன்!
தீபாவளி என்றாலே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளி ரிலீஸை தவிர்த்து வருகின்றனர். இதன்காரணமாக தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற வளர்ந்து வரும் முன்னணி நாயகர்கள் ஆக்கிரமித்து விடுகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கார்த்தி மற்றும் எஸ்.கே.வின் படங்கள் தான் அதிகளவில் தீபாவளிக்கு வந்துள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
இதில் 2022-ம் ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படத்துக்கு போடியாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் ஜப்பான் படம் ரிலீஸ் ஆகி பிளாப் ஆனது. இந்த பிளாப் செண்டிமெண்டை 2024-ம் ஆண்டு தீபாவளி அன்று உடைத்தெறிந்தார் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ் எப்போது தெரியுமா?
தீபாவளிக்கு எஸ்.கே.23
நடிகர் சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் அமரன் படைத்தது. அப்படம் 350 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. அமரன் படம் கொடுத்த நம்பிக்கையால் 2025-ம் ஆண்டு தீபாவளிக்கும் தன் படத்தை களமிறக்க தயாராகிவிட்டாராம் எஸ்.கே. அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே.23 திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத்
எஸ்.கே.23 திரைப்படம் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாம். முன்னதாக நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் தற்போது அப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளதால் தீபாவளி ரேஸில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார் எஸ்.கே. அமரன் போல இப்படமும் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... செல்ஃபி எடுக்க ஹெல்ப் கேட்ட சிவகார்த்திகேயன்: எஸ்கேயின் வளர்ச்சி பற்றி பேசிய எஸ்வி சேகர்!