பிரபல கன்னட மொழி நடிகையான, ஹரிப்ரியா ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். அந்த வகையில், நடிகர் கரண் ஹீரோவாக நடித்த, 'கனகவேல் காக்க' என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் அர்ஜுனுக்கு ஜோடியாக 'வல்ல கோட்டை' படத்திலும் நடித்திருந்தார். அதே போல் 'நான் மிருகமாய் மாற' மற்றும் கடந்த ஆண்டு வெளியான 'ஒரு தீ' என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
25
கன்னட நடிகருடன் காதல் திருமணம்:
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஹரிபிரியா, துளு, தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு 26 ஆம் தேதிவசிஷ்டா சிம்ஹா என்கிற கன்னட பட நடிகரை காதலித்து கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் மைசூரில் பிரமாண்டமாக நடந்தது.
இவர்களின் இரண்டாவது திருமண நாளான நேற்று, ஹரிப்ரியா அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை இந்த நட்சத்திர ஜோடிகள் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
45
ஹரிபிரியாவுக்கு - வசிஷ்டா சிம்ஹா நடத்திய வளைகாப்பு:
சமீபத்தில் தான், நடிகர் வசிஷ்டா சிம்ஹா தனது மனைவி ஹரிப்ரியாவின், வளைகாப்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார். இதில் கன்னடத்தின் பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கலந்து கொண்டு இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிகை ஹரி ப்ரியா திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது குழந்தை பிறந்துள்ளதால், சில காலம் திரையுலகிற்கு பிரேக் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. வசிஷ்டா சிம்ஹா தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.