Published : Jan 27, 2025, 12:35 PM ISTUpdated : Jan 27, 2025, 12:36 PM IST
மதகஜராஜா படத்தின் வெற்றிக்கு பின் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டு பணிகள் தொடங்கியுள்ளதாக கூறிய கெளதம் மேனன், அப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.
ஒருபடம் கிடப்பில் போடப்பட்டால் அப்படம் பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரிலீஸ் ஆகும்போது அதற்கு வரவேற்பு கிடைக்குமா என்கிற பயம் அனைவருக்குமே இருக்கும். ஆனால் அந்த பயத்தையெல்லாம் தகர்த்தெறிந்த படம் தான் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருந்த அப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது. மதகஜராஜா படத்தின் வெற்றியால் கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்கும் விடிவுகாலம் பிறந்துள்ளது.
24
கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம்
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அப்படம் 8 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடைக்கிறது. தற்போது அப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை இயக்குனர் கெளதம் மேனனே சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில் அப்படத்தின் ரிலீஸ் பிளான் பற்றியும் அவர் கூறி இருக்கிறார்.
அதன்படி துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வருகிற கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆக உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் மதகஜராஜாவை போல் மாபெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் டிடி, ராதிகா சரத்குமார், விநாயகன் ஆகியோரும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
44
கெளதம் மேனன், சீயான் விக்ரம்
துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முதலில் சூர்யா தான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கதையில் திருப்தி இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இந்த கதை சென்றது. அவரும் நடிப்பதாக உறுதியளித்து பின்னர் மறுத்திருக்கிறார். இதையடுத்து கடைசியாக சீயான் விக்ரம் அந்த படத்தின் கதை கேட்டதும் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அப்படத்தில் ஜான் என்கிற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.