மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை ரேகா நாயர், தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து கோலிவுட்டில் கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற படங்களில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.