Vijayakumar and Arun Vijay
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருக்கு 2 மனைவிகள். அவரின் முதல் மனைவியான முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். பின்னர் நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் மஞ்சுளாவிற்கு பிறந்த குழந்தைகள்..
இதில் வனிதா விஜயகுமார் மட்டும் தனது தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். ஆனால் மற்ற சகோதரிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். குடும்பத்தில் எந்த விசேஷம் என்றாலோ அல்லது யாருக்கேனும் பிறந்தநாள் என்றாலும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகின்றனர்.
அனிதா விஜயகுமார் தவிர மற்ற அனைவருமே திரைப்படங்களில் நடித்துள்ளனர். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில் திருமணமான உடன் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டனர். அருண் விஜய் தற்போது ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கேர்கடரிலும் மிரட்டி வருகிறார்.
விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா விஜயகுமார், கூலி என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திய அவர் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பிறந்தநாள் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிதாவின் மகள் தியாவுக்கும், கவிதாவின் பேத்திக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால் இருவரும் ரெட் கலர் ட்ரெஸ்ஸில் கேக் வெட்டுகின்றனர். தியா 25-வது பிறந்த்நாளை கொண்டாடும் நிலையில், கவிதாவின் பேத்தி 2-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.