சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா தான்! அதன் மதிப்பு இத்தனை கோடியா?

Published : Sep 28, 2023, 09:40 AM ISTUpdated : Sep 28, 2023, 12:21 PM IST

நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார்.

PREV
18
சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா தான்! அதன் மதிப்பு இத்தனை கோடியா?

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார்.

28

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் ஹீரோயினை மையப்படுத்தி வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

38
Nayanthaara

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 20 ஆண்டுகளாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார். தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் கவர்ச்சியால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்
 

48

நயன்தாராவும் அவரின் கணவர் விக்னேஷ் சிவனும் இந்த பிரைவேட் ஜெட் விமானத்தை தனிப்பட்ட பயணங்களுக்கும், தொழில்சார்ந்த தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவின் தனியார் ஜெட் விமானத்தின் உட்புறத்தின் சில படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

58

‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம்பதித்துள்ள நயன்தாரா இந்த நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய். ஒரு தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

68

தென்னிந்திய திரையுலகில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தித் திரையுலகைப் பொறுத்தவரை, ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா மற்றும் மாதுரி தீட்சித் போன்ற நடிகைகள் தனியார் ஜெட் விமானத்தை சொந்தமாக வைத்துள்ளனர்.. நயன்தாராவின் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

78
nayanthara

மேலும் நயன்தாராவிடம் விலை ஆடம்பர கார்களும் உள்ளன. குறிப்பாக ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

பப்ளி பாய்ஸ் பர்த்டே... மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் மாஸாக கொண்டாடிய விக்கி-நயன்! வைரலாகும் போட்டோஸ்
 

88

மறுபுறம் தனது கெரியரிலும் தொடர்ந்து பிசியாக இருக்கும் நயன்தாரா 'பாட்டு', 'லேடி சூப்பர் ஸ்டார் 75', 'தி டெஸ்ட்', 'இறைவன்', 'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' மற்றும் 'தனி ஒருவன் 2' போன்ற படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்

Read more Photos on
click me!

Recommended Stories