இந்த நிலையில் மீண்டும் கத்தார் திரும்பி உள்ள அனிதா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ரெசிபிகளை அனிதா விஜயகுமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது எனர்ஜி பூஸ்டர் ரெசிபியை பகிர்ந்து வருகிறார். அதில் செலரி, ஆரஞ்சு, பெர்ரி, எலுமிச்சை, இஞ்சி, கேரட் ஆகியவற்றுடன் ஃபிளாக்ஸ் விதைகளை சேர்த்து அரைத்தால் ஆரோக்கியமான எனர்ஜி ட்ரிங்கை அவர் தயார் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.