இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகர் டைகர் ஷெராப் உடன் இணைந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார் ராஷ்மிகா. அப்போது தொகுப்பாளர், நீங்க நரூட்டோவை ரகசிய திருமணம் செஞ்சுகிட்டீங்களாமே என நடிகை ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்டார். இதற்கு நடிகை ராஷ்மிகாவும் ஆமாம் என சொன்னதோடு, என் இதயமே நரூட்டோவுக்கு தான், அந்த கதாபாத்திரத்தை முழுவதுமாக திருமணம் செய்துகொண்டேன் என கூறினார்.