ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சிவா மனசுல சக்தி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்துக்கு பின்னர் ராஜேஷ் இயக்கிய படம் என்பதால் இதற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை டபுள் மடங்கு பூர்த்தி செய்த படமாக பாஸ் என்கிற பாஸ்கரன் அமைந்தது.
இந்நிலையில், தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலும் ஆர்யா தான் நாயகனாக நடிக்க உள்ளார். ராஜேஷ் இயக்க உள்ள இப்படத்தின் மூலம் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக எண்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளார்களாம். முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நயன்தாராவையே இதிலும் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை தயாரிப்பது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக... எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லிம் நடிகை!