கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படம் பிளாப் ஆனாலும், அதில் இடம்பெற்ற ஒரு சீனில் இவர் கண்ணடிக்கும் காட்சி இணையத்தில் படு வைரல் ஆகி, ஒரே நாளில் உலகம் முழுக்க பேமஸ் ஆகிவிட்டார்.
கண்ணடிக்கும் காட்சி பேமஸ் ஆனதால், ரசிகர்கள் இவரை செல்லமாக கண்ணழகி என்று அழைக்கத் தொடங்கினர். இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் உள்ளனர்.
மலையாளத்தை தொடர்ந்து நடிகை பிரியா வாரியருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் தற்போது டோலிவுட்டில் பிசியான நடிகையாக உள்ளார் பிரியா.
புரோ படத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
தமிழில் தம்பி ராமையா நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கி நடித்த விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி உள்ள திரைப்படம் தான் புரோ.
புரோ திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை பிரியா வாரியர் கவர்ச்சி உடை அணிந்து வந்து கலந்துகொண்டார்.