பிரிட்டன் நாட்டில் பிறந்த எமி ஜாக்சன் கடந்த 2010ம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் திரையுமாகில் அறிமுகமானார். தற்போது தமிழ், ஆங்கிலம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் அவர். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு Andreas என்ற மகன் பிறந்த நிலையில் தற்போது அவர் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.