"பேசி பேசி சம்பாதித்த வீடு".. கனவு இல்லத்தை கட்டி முடித்த இயக்குனர் ராஜ் மோகன் - வீட்டின் பெயர் என்ன தெரியுமா?

Ansgar R |  
Published : Mar 23, 2024, 03:09 PM IST

Raj Mohan New House : YouTube சேனல்கள் மூலம் பிரபலம் அடைந்த ராஜ்மோகன், தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் தனது புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். 

PREV
13
"பேசி பேசி சம்பாதித்த வீடு".. கனவு இல்லத்தை கட்டி முடித்த இயக்குனர் ராஜ் மோகன் - வீட்டின் பெயர் என்ன தெரியுமா?
Raj Mohan

"புட் சட்னி" என்கின்ற youtube சேனல் மூலம் பிரபலமான நபர் தான் "புட் சட்னி" ராஜ்மோகன். தமிழ் மீது அவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தொடர்ச்சியாக பல மேடை பேச்சுகள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இவர், ஒரு கட்டத்தில் சிறந்த மோட்டிவேஷனல் பேச்சாளராகவும் மாறினார்.

Famous TV Actors: ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா? Ormax தகவல்!

23
Rajmohan Sons

அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த இவருக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டு "பாபா பிளாக் ஷீப்" என்கின்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பிரபல "பிளாக் ஷீப்" யூட்யூப் சேனலில் உள்ள பிரபலங்கள் நடித்த இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி நடித்திருந்தார். "ரோமியோ பிக்சர்ஸ்" அந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

33
Director Rajmohan

கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் பயணித்து வரும் ராஜ்மோகன், தற்போது சென்னையில் தனது கனவு இல்லத்தை கட்டி முடித்திருக்கிறார். "பேசி பேசி சம்பாதித்த வீடு இது, இதன் உள்ளே அன்பாய் பேச மட்டுமே அனுமதி. நீங்களும் உங்கள் பரிசுகளை அனுப்பலாம். வாயார வாழ்த்தும் வார்த்தைகளை விட வேறு பரிசு இருக்க முடியுமா? என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது இந்த வீட்டிற்கு தன் மூத்த மகன் பெயரான "பகத்சிங்" இல்லம் என்று வைத்து அழகு பார்த்திருக்கிறார் ராஜ்மோகன்.

"மக்கள் செல்வன் கெட்டப்பில் அகில உலக சூப்பர் ஸ்டார்".. காமெடி சரவெடியாக வரும் "சூது கவ்வும் 2" - டீசர் இதோ!

Read more Photos on
click me!

Recommended Stories