Meetha Raghunath Marriage Photos
குட் நைட் என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மீதா ரகுநாத். இவருக்கு கடந்த வருடம் ஊட்டியில் வைத்து ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
Meetha Raghunath Wedding Photos,
'முதல் நீ முடியும் நீ' என்ற படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் கிஷன் தாஸுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பிறகு வினய் சந்திரசேகரன் இயக்கிய மணிகண்டனுடன் 'குட் நைட்' படத்தில் நடித்தார்.
Meetha Raghunath Latest Photos
'குட் நைட்' படம் விமர்சன ரீதியாகப் நல்ல வரவேற்பைப் பெற்றது. எளிமையான கதை மற்றும் திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் மணிகண்டனுக்கு மனைவியாகத் தோன்றிய மீதாவின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன.
Meetha Raghunath with her Husband
இந்நிலையில், மீதா ரகுநாத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது வருங்காலக் கணவருடன் எடுத்த அழகிய படங்களைப் பதிவிட்டுள்ளார். நிச்சயதார்த்தம் ஏற்கெனவே முடிந்த நிலையில், திருமணமும் ரகசியமாக நடந்திருக்கிறதா ரசிகர்பகள் யோசிக்கின்றனர்.