Published : Mar 06, 2024, 11:46 PM ISTUpdated : Mar 06, 2024, 11:55 PM IST
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற்றன. இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மனைவி லதாவுடன் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்குச் சென்றிருந்தார்.
"எங்கள் அன்பான நிதா அத்தை மற்றும் முகேஷ் மாமாவுக்கு நன்றி. அன்புள்ள ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் மாயாஜாலம் போல இருந்தது" என்று ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பதிவில் எழுதியுள்ளார்.