அடுத்து இளையராஜா கார்த்திக்கிடம் தீபா பாட கூடாதுனு எவ்வளவு தடை எவ்வளவு எதிரிகள் என்று பேச வீட்லயே ஐஸ்வர்யா அண்ணி எல்லாம் இருக்காங்க என்று சொல்கிறான். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க கோவிலில் அபிராமி கீழே விழுந்ததையும் தன்னை திட்டிய கதையையும் சொல்கிறாள். கார்த்திக் சரி ப்ரீயா விடுங்க, நான் பார்த்துக்கறேன் என்று பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து கொண்டு அபிராமியை பார்க்க வருகிறான்.